போலி 5,000 ரூபாய் நோட்டு 
இந்தியா

புதிய 5,000 ரூபாய் நோட்டா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன?

ஆர்பிஐ வெளியிட திட்டம் என புதிய 5,000 ரூபாய் நோட்டுப் புகைப்படத்துடன் தகவல்.

DIN

சமூக வலைதளங்களில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.5,000 நோட்டை வெளியிட திட்டமிட்டிருப்பதாக, பச்சை நிற ரூபாய் நோட்டுடன் வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று மத்திய அரசு மறுத்துள்ளது.

கடந்த ஒரு சில நாள்களாக சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாகி வந்த நிலையில், அது உண்மையில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை உண்மை என்று நம்பிய பலரும், தங்களது வாட்ஸ்ஆப் குழுக்களுக்கும் இதனை பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், இது குறித்து பிஐபி உண்மை அறியும் பக்கத்தில், இதுபோன்ற எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. ரூ.5,000 நோட்டு வெளியிடப்படுவது குறித்து வெளியாகும் தகவல்கள் பொய் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

எனவே, ஆர்பிஐ தொடர்பான எந்த தகவல்களையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும், ஆர்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாள்தோறும் அதன் புதிய அறிவிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிடும். எனவே, இதுபோன்ற தகவல்கள் வந்தால், அந்த இணையதளத்தில் சென்று உண்மைத் தன்மையை ஆராயலாம், அல்லது உறுதி செய்யப்படாத தகவல்களை மற்றவர்களுக்குப் பகிர்வதை தவிர்க்கலாம். இதனால், போலியான தகவல் நம் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுவது தவிர்க்கப்படும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இது வெறும் பொய்த் தகவலாக மட்டுமல்லாமல், இதுபற்றி அறிய என்று ஏதேனும் மோசடி லிங்குகளும் இணைக்கப்படும் அபாயம் இருப்பதால் மக்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜீன்ஸ்... ஜீன்ஸ்... சோபிதா துலிபாலா!

வெளிச்சப் பூவே... ஸ்ரீதேவி அசோக்!

கார்த்திகை மாதப் பலன்கள் - மீனம்

இந்தியாவில் 9ல் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்! - ஐசிஎம்ஆர்

கார்த்திகை மாதப் பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT