கோப்புப்படம் DIN
இந்தியா

பான் அட்டையை புதுப்பிக்க.. என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம்!

பான் அட்டையை புதுப்பிக்காவிட்டால் என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை

DIN

பான் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்டு வரும் தகவல்களை திறக்க வேண்டாம், அது மோசடி அழைப்பாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த விதமான மோசடி நடத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் பான் அட்டையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று அச்சுறுத்தும் வகையில் வந்த மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்தால், அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பல விவரங்கள் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுபோன்ற எந்தவொரு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலையும் தாங்கள் அனுப்பவில்லை என்று வங்கித் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஐபி உண்மை அறியும் பக்கத்தில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், உங்கள் பான் அட்டையை புதுப்பிக்காவிட்டால் 24 மணி நேரத்தில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் தகவல் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற குறிப்பிட்ட வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வரும்போது, வாடிக்கையாளர்களும், இணைப்பில் கேட்கப்படும் தகவல்களை சந்தேகமின்றி கொடுத்துவிடும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோல, இணையதளப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற ஆணை வந்திருப்பதாக வரும் மின்னஞ்சல்களையும் நம்ப வேண்டாம் என்றும், நீதிமன்றங்கள் அதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிக்கவில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

SCROLL FOR NEXT