விபத்து(கோப்புப்படம்) 
இந்தியா

ஜார்க்கண்ட்: ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயம்

ஜார்க்கண்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜார்க்கண்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் பயணித்த ஆட்டோ வெள்ளிக்கிழமை திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தொழிலாளர்கள் அனைவரும் தகுரா கிராமத்தில் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது ​​பாலம் அருகே ஆட்டோ கவிழ்ந்தது.

மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? செந்தில் பாலாஜி பதில்!

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த ஏழு தொழிலாளர்கள், முதன்மை சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT