எச்எம்பிவி பாதிப்பு - கோப்புப்படம் 
இந்தியா

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று கண்டறிந்தது பற்றி..

DIN

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய எச்எம்பிவி தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறுகையில்,

எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

குழந்தை நான்கு நாள்களுக்கு முன்பு சளி தொடர்பான அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வழக்கமான நடைமுறையாகக் காய்ச்சல் மற்றும் காய்ச்சல் தொடர்பான சோதனைகளுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மாதிரிகள் அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.

லாஹோலை தளமாகக் கொண்ட ஐசிஎம்ஆர்-ஆம்எம்ஆர்சியின் சோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டது. இது ஒரு பொதுவான வைரஸ் மற்றும் கவலைப்பட ஒன்றுமில்லை.

அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது அனைத்து வயதினருக்கும், குறிப்பாகக் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய பல சுவாச வைரஸ்களில் ஒன்றாகும்.

இந்த வைரஸ் தொற்றான பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும். சிலருக்கு தாங்களாகவே குணமடைகின்றனர் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT