ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி  
இந்தியா

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு பாய்ந்து பலியானார்.

DIN

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு துளைத்து தனது அறையில் பலியாகி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு லூதியானா தொகுதி எம்எல்ஏவான குர்பிரீத் கோகி (57) நேற்று (ஜன. 10) இரவு தனது அறையில் தனியாக இருந்தார். அப்போது தனது கைத் துப்பாக்கியை அவர் துடைத்துக் கொண்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து அவரது தலையில் குண்டு துளைத்ததாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு உடனடியாக குடும்பத்தினர் அவரது அறைக்குச் சென்று அவரை தயானந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக குர்பிரீத் கோகு குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பஞ்சாப் முதல்வர் இரங்கல்

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் வருத்தத்துடன் குறிப்பிட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், ”மரியாதைக்குரிய எம்எல்ஏ குர்பிரீத் கோகி ஜி காலமானார் என்ற இதயத்தை உடைக்கும் செய்தியை அறிந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டு மிக வருத்தமாக இருக்கிறது. கோகி ஜி மிகவும் அன்பானவர். இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன். கடவுள் அவரது ஆன்மாவை ஆசீர்வதித்து, இந்த இழப்பைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்த கோகி, லூதியான மேற்கு தொகுதியில் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-யுமான பாரத் பூஷன் அஷுவைத் தோற்கடித்தார்.

நேற்று (ஜன. 11) இறப்பதற்கு முன்னர் லூதியானா பார் அசோசொயேஷன் நடத்திய ஒரு நிகழ்வில் பஞ்சாப் பேரவைத் தலைவர் குல்தர் சந்த்வனுடன் கோகி கலந்துகொண்டார்.

இரவில் திடீரென அவர் தன்னைத் தானே சுட்டுக் கொன்று பலியான சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT