பஞ்சாப் முதல்வருடன் லக்கி ஓபராய் 
இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக் கொலை!

பஞ்சாபில் ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி லக்கி ஓபராய் வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜலந்தரில் உள்ள குருத்வாராவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 7.50 மணியளவில் வெளியே வந்த லக்கி ஓபராய் அவரது காரில் ஏறியுள்ளார்.

அப்போது இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த மர்ம நபர்கள் காருக்குள் இருந்த லக்கி ஓபராயை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். சுமார் 8 முதல் 10 முறை அவரை நோக்கிச் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், உயிரிழந்துவிட்டதாக ஜலந்தர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர் தொகுதியின் பொறுப்பாளர் ராஜ்விந்தர் தியாராவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

Aam Aadmi leader shot dead in Punjab!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: பிப்.11-க்கு ஒத்திவைப்பு

வெள்ளி விலை ரூ. 300-க்கு கீழ் குறைந்தது! தங்கமும் குறைவு!

With Love Movie Review - நினைவெல்லாம் காதல்.. | Abishan Jeevinth | Anaswara Rajan | Dinamani Talkies

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவு

நினைவெல்லாம் காதல்... வித் லவ் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT