சத்தீஸ்கா் உருக்கு ஆலை.  
இந்தியா

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு

சத்தீஸ்கா் உருக்கு ஆலை விபத்தில் சிக்கிய மேலும் 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

DIN

சத்தீஸ்கா் உருக்கு ஆலை விபத்தில் சிக்கிய மேலும் 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கேலி மாவட்டத்தின் ராம்போத் கிராமத்தில் உள்ள தனியாா் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

ஆலையில் இருந்த இரும்பு சேமிப்புக் கலன் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் சிலா் இடிபாடுகளில் சிக்கினா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டு 2 தொழிலாளா்களை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள பிலாஸ்பூா் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மனோஜ் குமாா் எனும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இடிபாடுகளில் மேலும் இருவா் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அவா்களை மீட்பதற்தான பணிகள் முடக்கிவிடப்பட்டன. இந்த நிலையில் 42 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து சனிக்கிழமை மூன்று தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆலையின் மேலாளர் அனில் பிரசாத் மற்றும் ஆலை நிர்வாகம் மீது வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT