திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கலாசாரத்தில் மிகவும் முன்னோடி புலவரும், உலகப் பொதுமறையான திருக்குறள் தந்தவருமான திருவள்ளுவரின் பிறந்த நாள், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டப்படுகிறது.
இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு அலுவலர்களும் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் நாள் பற்றி பிரதமர் மோடியும் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரைத் திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம்.
அவர் இயற்றிய திருக்குறள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.
எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அவரது படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பலவகையான பிரச்சனைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து கடினமாகப் பணியாற்றுவோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.