ஆறு - பிரதிப்படம் Center-Center-Kochi
இந்தியா

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

நாட்டில் பெண்கள் பெயரிலேயே அனைத்து நதிகளும் பாயும் நிலையில்,ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி

DIN

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.

இந்த நதிக்கு பல பெருமைகள் இருந்தாலும், நாட்டில் ஆணின் பெயரைக் கொண்டிருக்கும் ஒரே நதி என்ற பெருமையும் உள்ளது.

அந்த நதி பிரம்மபுத்திரா.. இந்த நிதியே, பிரம்மனின் குழந்தை என்ற ஒரு புராண கால நம்பிக்கையும் உள்ளது. பிரம்மனுக்கும் அமோகா என்ற அழகிய பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு, அவர்களுக்குப் பிறந்த குழந்தையே இந்த பிரம்மபுத்திரா நதி என்றும் வழங்கப்படுகிறது.

பிரம்மபுத்திரா என்பதற்கு, பிரம்மனின் மகன் என்று பொருள். இந்த நதி இமாலயத்தில் தொடங்கி திபெத் வழியாக 2,900 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்தோடுகிறது. அதனாலேயே, இது உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில், அசாம் வழியாக பாய்ந்தோடி வங்கதேசம் சென்று பிறகு வங்கக் கடலை அடைகிறது.

மற்ற நதிகளைப் போல அல்லாமல், பிரம்மபுத்திரா நதி ஆக்ரோஷமாக பாய்ந்தோடுவதால், இதற்கு ஆண் பெயர் சூட்டப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT