கோப்புப் படம் 
இந்தியா

பாலியல் துன்புறுத்தலால் பெண் மென்பொருள் பொறியாளர் தற்கொலை!

பெங்களூருவில் உறவினரின் பாலியல் துன்புறுத்தலால் பெண் மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

DIN

பெங்களூருவில் பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது உறவினரின் பாலியல் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக இருந்த பெண்ணும், அவரது உறவினரான பிரவீன் சிங் என்பவரும் 6 ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் தனியே எடுத்த புகைப்படங்களையும் விடியோக்களையும் பெண்ணின் குடும்பத்தினரிடம் காட்டி விடுவதாகக் கூறி, பெண்ணை பிரவீன் பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, பெண்ணை பிரவீன் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெண்ணுக்கும் வேறொரு நபருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட, பிரவீனுடனான உறவினை தவிர்த்து வந்துள்ளார். இதனால், மீண்டும் பெண்ணை தீவிரமாக மிரட்டி வந்துள்ளார். மேலும், தனியார் விடுதி ஒன்றில் தன்னைச் சந்திக்க வருமாறு பெண்ணிடம் பிரவீன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, விடுதியில் பிரவீனை சந்தித்த பெண், தான் கொண்டு சென்ற பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண்ணின் மீதான தீயை அணைக்க பிரவீன் முற்பட்டதுடன், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பெண்ணின் தற்கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், பிரவீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பெண் மீதான பிரவீனின் பாலியல் மிரட்டலும் துன்புறுத்தலும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் டிஆா்பிசிசிசி மேல்நிலைப் பள்ளியின் 155-ஆவது ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

வானம்பாடி இயக்கத்துக்கு உயிா் கொடுத்தவா்களில் முதன்மையானவா் கவிஞா் சிற்பி! - சக்தி குழுமங்களின் செயல் இயக்குநா் தரணிபதி ராஜ்குமாா்

SCROLL FOR NEXT