ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோப்புப் படம்
இந்தியா

கேஜரிவால் கொள்கையால் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ரவீந்தர் சோலங்கியும், நரேந்தர் கிர்சாவும் பாஜகவில் இணைந்தனர்.

DIN

தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாள்களே உள்ளநிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்.

தில்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களான பாப்ரோலா வார்டு கவுன்சிலர் ரவீந்தர் சோலங்கியும், மங்களபுரி கவுன்சிலர் நரேந்தர் கிர்சா இருவரும் ஆம் ஆத்மி கட்சியைவிட்டு விலகி, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்சதேவா மற்றும் பாஜக எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் மற்றும் கொள்கையால் ஏமாற்றமடைந்ததால், கவுன்சிலர்கள் இருவரும் ஆம் ஆத்மியைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக எம்.பி. கமல்ஜீத் கூறினார்.

தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்தலில் முன்னணி கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தில்லியில் 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் தீா்க்கமான வெற்றிகளைப் பெற்ற ஆம் ஆத்மி இந்த தோ்தலிலும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவதை நோக்கமாகக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT