ED 
இந்தியா

'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியாது'

மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என அமலாக்கத் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்.

DIN

மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்த முடியாது என அமலாக்கத் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் மீது, குல் அச்ரா என்பவர் மோசடி, ஒப்பந்த மீறல் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.

இதற்கு எதிராக ராகேஷ் ஜெயின், மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அமலாக்க இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ராகேஷ் ஜெயின் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த குல் அச்ராவுக்கும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி மிலிந்த் ஜாதவ், இந்த அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT