ரயில் விபத்து  
இந்தியா

மகாராஷ்டிர ரயில் விபத்து: பலி 13-ஆக உயர்வு!

மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். பின்னா், பெட்டியில் இருந்து அவசரமாக கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்தனா்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி இடையிலான கா்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 12 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்ததாக ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரயில்வே தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

SCROLL FOR NEXT