கோப்புப் படம் 
இந்தியா

லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!

3 ஆண்டுகளில் மெர்க்குரி இவி டெக் லிமிடெட் 9,900 சதவிகிதமும், 5 ஆண்டுகளில் பிரவேக் லிமிடெட் 29,814 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

DIN

ஆகமெர்க்குரி இவி டெக் லிமிடெட் மற்றும் பிரவேக் லிமிடெட் நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் அளித்துள்ளது.

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான மெர்க்குரி இவி டெக் லிமிடெட் (Mercury EV-Tech Limited) நிறுவனத்தின் பங்கின் விலை, 2022 ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இந்த நிறுவனம், தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 ஆண்டில் மட்டும் 9,900 சதவிகித லாபத்தை அளித்துள்ளது.

இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ. 0.85-லிருந்து தற்போது ரூ. 85-ஆக உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நிறுவனத்தின் பங்குகளில் ஒருவர் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ஒரு கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.

அதுமட்டுமின்றி, சொகுசு விடுதி நிறுவனமான பிரவேக் லிமிடெட் (Praveg Ltd) நிறுவனத்தின் பங்குகளும் சமீபத்தில் உயர்ந்துள்ளன. இந்த நிறுவனப் பங்கின் விலை 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 2.35-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 703-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனத்தின் பங்கு 5 ஆண்டுகளில் 29,814 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிய வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது ரூ. 3 கோடியாக அதிகரித்திருக்கும்.

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT