குடியரசு நாள் விழா: வாகா எல்லையில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்!
வாகா எல்லையில் குடியரசு நாள் விழா கோலாகலம்!
புது தில்லி : குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாகா எல்லையில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி எச். என். ஜோஷி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, நேற்று(ஜன. 25) மாலை கொடியிறக்கப்படும் நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏராளமான மக்கள் வாகா எல்லையில் திரண்டிருந்தனர். குடியரசு நாள் விழாவயொட்டி,
Advertisement
Advertisement
சென்னையில் இன்று காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். புது தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை தேசியக் கொடியேற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.