கோப்புப்படம் 
இந்தியா

பட்ஜெட்: ஜன. 30-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி வருகிற ஜன. 30 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு.

DIN

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி வருகிற ஜன. 30 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் வருகிற ஜன. 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

மக்களவையில் ஜன. 31 அன்று காலை 11 மணிக்கு, இரு அவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.

பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடையும். இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வருகிற ஜன. 30 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதால் ஜன. 30 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

கியா காா்கள் விற்பனை 8% உயா்வு

மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT