ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் ஜார்க்கண்ட் காவல்துறை மற்றும் கோப்ரா படைக்குழுவின் 209-ஆவது பிரிவு வீரா்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே புதன்கிழமை காலை மோதல் நடந்தது. இதுவரை ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையினரின் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தொடர்ந்து நக்ஸல் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.