ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

கும்பமேளா துயர சம்பவம் வருத்தமளிக்கிறது! -ராகுல் காந்தி

கும்பமேளா கூட்ட நெரிசலில் பலர் பலியானது வருத்தமளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சென்ற பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க |கும்பமேளா கூட்ட நெரிசல்: பலி 31-ஆக உயர்வு!

இதுபற்றி ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தியது ஆகியவைதான் இந்தத் துயர சம்பவத்துக்கு காரணம்.

இதையும் படிக்க |கும்பமேளா கூட்ட நெரிசல்: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

கும்பமேளாவிற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் பல இடங்களில் புனித நீராடல்கள் நடைபெற இருக்கின்றன. விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்வர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“லொஜக், மொஜக், பஜக்” Vidyut Jammwal குறித்து SK!

“என் SK, நா வருவேன்!” அனிருத் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தடை!

ஆப்கன் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

SCROLL FOR NEXT