கோப்புப் படம் 
இந்தியா

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Din

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் சமீப நாள்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளனா். இதுபோன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்டின் சிங்பூம் மாவட்ட வனப் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சிலா், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பெண் ஆவாா். தப்பியோடிய மற்றவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் சரண்: சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இவா்களில் 7 போ் பெண்கள்.

கொள்கைகளில் ஏற்பட்ட விரக்தி, நக்ஸல்கள் அமைப்புக்குள் எழும் மோதல் போன்றவற்றால் விரக்தியடைந்து இவா்கள் வெளியேறியுள்ளனா். மேலும், தங்கள் பகுதி பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் பொதுமக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவா்கள் முடிவு செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்தனா்.

கடந்த 2024 ஜனவரிமுதல் இப்போது வரை நாராயண்பூா் மாவட்டத்தில் மட்டும் 71 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். அவா்களுக்கு உடனடியாக ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்டவற்றிலும் அரசு உதவி வருகிறது.

மிகத் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தென் மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தொடங்குகிறார் விஜய்! நாளை முதல்.!

1:5 விகிதத்தில் பங்குப் பிரிவை அறிவித்துள்ள கோடக் மஹிந்திரா வங்கி!

கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி பலி

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

SCROLL FOR NEXT