கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்  
இந்தியா

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசாரிக்க உத்தரவு!

கல்லூரியின் காவலாளியை ஜூலை 4 வரை காவலில் விசாரிக்க உத்தரவு!

DIN

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டில், அவா் பயிலும் கல்லூரியின் காவலாளியும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி மாலையில், தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கட்டடத்தின் தரைத்தளத்தில் மாணவா் சங்க அலுவலகம் அருகே உள்ள பாதுகாவலரின் அறையில் சம்பவம் நடந்துள்ளது. கல்விப் படிவம் நிரப்ப வேண்டுமெனக் கூறி யாரோ சிலரால் வரவழைக்கப்பட்ட மாணவி, பின்னா், அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அங்கு முன்னாள் சட்ட மாணவா் மற்றும் 2 மூத்த மாணவா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இரவு 10 மணிவரை மாணவியைத் துன்புறுத்தியுள்ளனா். அதன் பிறகு, கடுமையான காயங்களுடன் அங்கிருந்து மாணவி விடுவிக்கப்பட்டுள்ளாா்.


சம்பந்தப்பட்ட மாணவியை திருமணம் செய்ய முன்னாள் மாணவா் விருப்பம் தெரிவித்தாகவும், மாணவி மறுத்துவிட்டதால், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கைதான மூவரையும் 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்தநிலையில், அலிபோர் நீதிமன்றத்தில் இன்று(ஜூலை 1) நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில், கைது செய்யப்பட மனோஜித் மிஷ்ரா(31), ஸைப் அஹமது(19) மற்றும் பிரமீத் முக்கோபாத்யாய்(20) ஆகிய மூவரையும் ஜூலை 8-ஆம் தேதி வரை காவலில் விசாரிக்கவும் காவலாளி பினாகி பானர்ஜியை ஜூலை 4 வரை காவலில் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Kolkata law college rape case: Accused sent to police custody till July 8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT