ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 - 15 சதவீதத்தை அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பல அரசு ஊழியர்கள், தங்களது தாய், தந்தையை கவனிக்கத் தவறி விடுவதால், அரசு இந்த நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் யோசனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்ற ஒரு திட்டத்தை தெலங்கானாவிலும் செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளி, வயதானவர்களின் நலத்திட்டங்கள் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தின்போது, முதல்வர் ரேவந்த் ரெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மூன்றாம் பாலினத்தவர்களை பணியமர்த்துவது குறித்து ஆய்வு செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.