கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு...
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேபோன்று, ஜூன் 28ல் கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Health authorities in Kerala on Friday issued an alert across three northern districts after two people showed possible signs of Nipah virus infection, reviving fears of an outbreak that the state has battled in the past.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.