முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 5 ஜூலை, 2025 at 12:33 PM
கோப்புப்படம்.
பகிர்:

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்லும் உள்ளூர் ரயிலில் வெள்ளிக்கிழமை காலை ஏறியிருக்கிறார்.

பிறகு அவர் போய்சர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது தன்னுடைய பையை மறந்து ரயிலேயே விட்டுச் சென்றதை அறிந்தார். உடனே அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து, இதுகுறித்து சபாலே ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் அங்கு சென்றதும் அவர்கள் பையை மீட்டனர்.

உரிய நடைமுறைகளை முடித்த பிறகு, பை சுக்லாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைக்கு போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

அபிஷேக் சுக்லா தவறவிட்ட பையில் ரூ.3.2 லட்சம் ரொக்கப் பணம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

summary

Government Railway Police (GRP) personnel in the district located and returned a bag containing Rs 3.2 lakh in cash to its owner who had forgotten it on a local train, officials said on Saturday.

முழு கட்டுரையைப் படிக்க →