கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுப்பு !

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

உ.பி.யில் கரும்பு தோட்டத்தின் அருகே இருந்து பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மட்கி தாகேடா கிராமத்தில் விவசாயி அதுல் தியாகிக்குச் சொந்தமான வயலில் உள்ள வடிகால் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் உடலுக்கு அருகில் மாம்பழப் பையும் சல்வாரும் கண்டெடுக்கப்பட்டன. தகவல் கிடைத்தவுடன் தடயவியல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். தினசரி கூலி வேலைக்காக அதிகாலை வீட்டை விட்டுச் சென்றவர் இரவு வரை திரும்பவில்லை. உடற்கூராய்வுக்காக உடல் அனுப்பப்பட்டுள்ளது, அதன் அறிக்கை கிடைத்த பின்னரே, இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய முடியும்.

பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறு உள்பட அனைத்து சாத்தியமான கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என்றார். இதனிடையே பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளன.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

The semi-nude body of a 55-year-old woman was found near a sugarcane field in Uttar Pradesh's Saharanpur district, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!

பார்வை தாக்கும்... சாந்தினி!

SCROLL FOR NEXT