விபத்துக்குள்ளான ஜாகுவார் விமானம் மற்றும் அதன் உடைந்த பாகங்கள், விமான தீப்பற்றி எரியும் விடியோ. 
இந்தியா

இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்து! விமானி உள்பட இருவர் பலி!

ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், விமானி உள்பட இருவர் பரிதாபமாக பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. சேதமடைந்த விமானத்தில் இருந்து விமானியின் உடல் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? பலியான விமானி மற்றும் மற்றொரு நபர் யார்? என்ற அடையாளங்கள் இன்னும் இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் காவல் துறையினர், இந்திய ராணுவத்தினர் விபத்து நடந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

IAF's Jaguar fighter jet crashes in Rajasthan's Churu, pilot among 2 dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

SCROLL FOR NEXT