பிரதிப் படம் ENS
இந்தியா

மகாராஷ்டிரம்: மாணவிகளை நிர்வாணமாக்கி கொடூரம்! 8 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக பள்ளி முதல்வர் உள்பட 8 பேர் கைது

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிப்பறையில் ரத்தக் கறை இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தினர்.

மாணவிகளில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்டனர்.

தொடர்ந்து, மாதவிடாய் இருப்பதாகக் கூறப்பட்ட மாணவிகளின் கைரேகையைப் பெற்ற பள்ளி நிர்வாகம், மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தியதுடன், மாதவிடாயுடன் இருக்கிறார்களா என்று சோதனையும் நடத்தியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த வெட்கக்கேடான செயலை, தங்கள் பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததால், புதன்கிழமையில் பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள்பட 8 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Girls made to strip for menstruation check: Thane school principal, another staffer arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

பிகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்.! புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

செனப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு! ஊருக்குள் புகுந்த நீரால் மக்கள் அவதி!

கீழணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்தார் அமைச்சர்!

SCROLL FOR NEXT