பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியது பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயது பூர்த்தியாகிறது. அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டுதான் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"விருது பெற்ற ஏழை பிரதமர்! செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது என்பதை மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாக நினைவுபடுத்தியுள்ளார்!
ஆனால், பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் சொல்லலாம். உங்களுக்கும்(மோகன் பாகவத்) வருகிற செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது என்று!
ஒரே அம்பு, இரு இலக்குகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.