கோப்புப் படம் 
இந்தியா

உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

இந்தியா - நேபாளம் இடையிலான எல்லை மூடப்படுவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான எல்லையானது தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரகண்டில் வரும் ஜூலை 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனால், பைட்டாடி மற்றும் தார்ச்சுலா மாவட்டங்களிலுள்ள இந்தியா - நேபாள எல்லை வழிகள் தேர்தல் நடைபெறும் நாள்களில் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் நடைபெறும் நாள்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், நேபாளத்துடனான இந்திய எல்லையை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தர்ச்சுலா மாவட்டத்திலுள்ள புல்காட் சோதனைச் சாவடி, ஜூலை 21 மாலை முதல் ஜுலை 24 அன்று காலை வரையிலும், பைட்டாடியிலுள்ள ஜுலாகாட் சோதனைச் சாவடி ஜூலை 25 மாலை முதல் ஜூலை 28 அன்று காலை வரையிலும் மூடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இத்துடன், அவசரகாலத் தேவைகள் ஏற்பட்டால், இருநாட்டு அதிகாரிகள் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எல்லைகள் தற்காலிகமாகத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT