திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது பிரிட்டன் போர் விமானம்  ANI
இந்தியா

ஒரு மாதத்துக்குப் பின்னா் கேரளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டன் போா் விமானம்

கேரளத்தில் இருந்து பிரிட்டன் போர் விமானம் புறப்பட்டுச் சென்றது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்த பிரிட்டன் போா் விமானம் பராமரிப்புப் பணிகளுக்குப் பின்னா், செவ்வாய்க்கிழமை மீண்டும் பயணம் மேற்கொண்டது.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் பிரிட்டனின் எஃப்-35பி போா் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னா் அந்த விமானத்தில் பொறியியல் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து 14 பொறியியலாளா்கள் குழு வந்து, அந்த விமானத்தில் பழுது பாா்ப்புப் பணிகளை மேற்கொண்டது.

அந்த விமானத்தில் பழுது பாா்ப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அந்த விமானம் கேரளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்ாக பிரிட்டன் தூதரக செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் டாா்வின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. அந்த விமான தரையிறக்க கட்டணம், திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் தினசரி வாடகை, விமான நிறுத்தக் கட்டணம் என மொத்தம் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சத்தை விமான நிலையம் வசூலித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

A British fighter jet that made an emergency landing in Thiruvananthapuram departed for the motherland after about a month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை: 3 பேர் காயம்

போலி திருமண அழைப்பிதழ் மோசடி! ஜாக்கிரதை!!

உங்கள் குரலில் நடக்கும் மோசடி! | AI Voice Cloning மோசடி நடப்பது எப்படி? | Cyber Shield

தெரியாமல் அனுப்பப்படும் பணம்! | UPI APP-கள் மூலம் மோசடி! | Cyber Security | Cyber Shield

“அவசர KYC புதுப்பிப்பு!”: வங்கி அதிகாரி போல பேசி மோசடி! | Cyber Security | Cyber Shield

SCROLL FOR NEXT