புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தான் அரசியலில் நுழைந்து, மக்களவை உறுப்பினரான போது, மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியை முதல் முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, நான் அவரிடம் சென்று, வணக்கம் வைத்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் புகைபிடிப்பவர்களுக்காக ஒரு அறை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இதைக் கேட்டதும் அவர் என்னைத் திட்டினார். இதுதான் ஒரு அவைத் தலைவருடனான உங்களது முதல் சந்திப்பு. இதைக் கேட்கவா என்னிடம் வந்தீர்கள் என்று கேட்டார். அன்றைய தினம், எனக்கு நன்றாக திட்டு விழுந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. இப்படியொரு பதவியில் இருப்பவர்களை சந்திக்க வேண்டும் என்றால், மிக முக்கியமான கோரிக்கைகளுடன்தான் சந்திக்க வேண்டும், சாதாரண விஷயங்களுக்காக அல்ல என்பதை புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரிஜிஜு, அரசியல் எதிர்க்கட்யினர் யாரும், எதிரிகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தனது அரசியல் வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் இருக்கையிலேயே கழிந்தது என்றும் கூறினார்.
இதையும் படிக்க. .. வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.