ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
நிகழ்விடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே இறப்புகளை உறுதிப்படுத்தினார்.
நான் சம்பவ இடத்திற்குச் செல்கிறேன். சம்பவம் குறித்த விரிவான அறிக்கைக்காக காத்திருக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி முகநூலில், "ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாதா ராணியிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.