பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.
நமது நிருபர்
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற சிந்தூர் ஆபரேஷன் சிறப்பு விவாதத்தில் என்.ஆர்.இளங்கோ பங்கேற்றுப்பேசியதாவது:
Advertisement
Advertisement
எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிஆர்எஃப் அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு எடுத்த நடவடிக்கை என்றும் அது ஒரு ராஜீய வெற்றி என்றும் கூறியதை பாராட்டுகிறோம்.
ஆனால், பிரதமரோ, வெளியுறவு அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ பாகிஸ்தான் - இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் டிரம்ப் கூறியது தவறு, பொய் என்ற ஒற்றை வரியைத்தான் மத்திய அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது. இறந்தவர்களின் சடலங்களை ஏற்கெனவே கைதாகி காவலில் உள்ள நபர்களைக் கொண்டு ஏன் அடையாளம் காணக் கூடாது? இந்த விவாகரத்தில் முழு உண்மையும் வெளிவர வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்தையைப் போல "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.