போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!
இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன.
தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான போரையடுத்து, முதன்முறையாக இருநாடுகளும் ஒரே கூட்ட அமர்வில் சந்தித்துக் கொண்டன. இருப்பினும், நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்து உரையாடல் எதுவுமில்லை.
Advertisement
Advertisement
பனிப்பாறைகளைப் பாதுகாப்பது குறித்து சர்வதேச மாநாடு துஷான்பேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக வெளிறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் வெளியிட்ட புகைப்படத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
தொடர்ந்து, சிங்கப்பூரில் நிகழ்ச்சியில் இந்திய முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் கலந்து கொண்டார். அதே கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதியாக ஜெனரல் ஸாஹிர் ஷம்ஷாத் மிர்சாவும் கலந்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும்கூட சந்தித்துக் கொள்ளவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.