கோப்புப்படம்.  
இந்தியா

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவின் பிரதான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனே ரயில்வே போலீஸாருடன் இணைந்து போலீஸாரும் ரயில் நிலையம் முழுவதும் முழுமையாக சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை இடைப்பட்ட இரவில் ரயில் நிலையத்தில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கை பல மணி நேரம் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூத்த போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் கருவி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

வெடிகுண்டு மிட்டலைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT