சாய்னாபா Photo | TNIE
இந்தியா

மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!

மகளின் திருமணத்தில் உயிரிழந்த தாய் பற்றி...

DIN

கேரளத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (வயது 44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் சனிக்கிழமை நடைபெறவிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சாய்னாபா, வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் டீ மற்றும் கப்கேக் சாப்பிட்டுள்ளார்.

அப்போது, சாய்னாபாவின் தொண்டையில் கப்கேக் மாட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

அவரை மீட்ட உறவினர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்த பின்னர், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் சாய்னாபாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே அவரது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும், உணவுத் துகள்கள் சுவாசக் குழாய் முழுவதும் அடைத்திருந்ததால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, சாய்னாபாவின் மகளின் திருமணத்துக்கான ஒப்பந்தத்தை மட்டும் திட்டமிட்டபடி சனிக்கிழமை உறவினர்கள் நடத்தினர்.

திருமணத்துக்கான மற்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்! செய்திகள்: சில வரிகளில் 31.7.25 | BJP | OPS | Mkstalin

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT