இந்தியா

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக...

DIN

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதிப் பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 17 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே 2025-ஆம் ஆண்டுக்கான நீட்-பிஜி தோ்வு இரண்டு தவணைகளாக நடத்தப்படும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) அறிவிக்கை செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட்-பிஜி 2025 தேர்வை ஒரே தவணையாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த கால அவகாசம் தேவை என்பதால் வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வரலாற்று சாதனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறைக்கு தீா்வு? பாகிஸ்தான் அரசு - போராட்டக் குழு ஒப்பந்தம்!

சிஆா்பிஎஃப் முகாம் அருகே இரு வயது குழந்தை சடலமாக மீட்பு

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோன்! காஷ்மீா் எல்லையில் தேடும் பணி தீவிரம்!

பூடான் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு!

விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது: கிருஷ்ணசாமி

SCROLL FOR NEXT