இண்டிகோ(கோப்புப்படம்.)  
இந்தியா

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத்திலிருந்து பாட்னா சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், சுமார் 192 பயணிகளுடன் இன்று (ஜூன் 4) மதியம் சென்று கொண்டிருந்தது.

அந்த விமானம், பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு விமான நிலையத்தில், மதியம் 12.45 மணியளவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்; அதில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. உடனடியாக, அந்த விமான நிலையத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, காவல் படை ஆகிய படைகளின் அதிகாரிகள் விரைந்தனர்.

பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT