பிரதமர் நரேந்திர மோடி கோப்புப்படம்
இந்தியா

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது வேதனையளிக்கிறதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதைப் பற்றி...

DIN

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் செய்யப்பட்டு பேருந்து பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மாலை 5 மணியளவில் கர்நாடக சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், ஆளுநர் தலைமையில் சின்னசாமி திடல் வரை அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ரசிகர்கள் ஆரவரத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

இதனால், காவல் துறையினர் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடியிலும் ஈடுபட்டனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பற்ற தன்மையே இந்த பலிக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

இதுபற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT