சாலை விபத்தில் 9 பேர் பலி 
இந்தியா

ம.பி.யில் திருமண விழாவிற்குச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

குடும்பத்துடன் திருமண விழாவுக்குச் சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கிய சோகம்..

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி வேன் மீது மோதியதில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் கல்யாண்புரா காவல் நிலையத்துக்குள்பட்ட சஜெலி ரயில்வே கிராசிங்கில் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேனில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். ஆனால் பலத்த காயம் அடைந்தனர்.

வழக்கமாகச் செல்லும் மேம்பாலம் சாலை கட்டுமானத்தில் உள்ளது. இதன் விளைவாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. லாரி தாண்ட்லாவிலிருந்து ஜாபுவாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த வேனில் மோதியது. சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர் என்று ஜாபுவாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் லால் குர்வே தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் மன்புரா கிராமத்திலிருந்து திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாக அந்த அதிகாரி கூறினார். உயிரிழந்தவர்கள் முகேஷ் கபேத் (40), அவரது மனைவி ஷாவ்லி (35), மகன் வினோத் (16), மகள் பயல் (12), ஒரே குடும்பத்தையும், மதி பாம்னியா (38), விஜய் பாம்னியா (14), காந்தா பாம்னியா (14), ராகினி பாம்னியா (9), ஜக்லி பர்மர் (35) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்தவர்களில் ஒரு இளம்பெண், குழந்தை உயிர் பிழைத்தனர். காயமடைந்தவர்கள் பாயல் பர்மர் (5), மற்றும் ஆஷு பாம்னியா (35) ஆகியோர் சிகிச்சைக்காக தஹோத் மற்றும் தாண்ட்லா மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். வேனிலிருந்த அனைத்து பயணிகளும் மேக்நகர் தாலுகாவில் உள்ள ஷிவ்கர் மஹுதாவைச் சேர்ந்தவர்கள்.

ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். தலைமறைவான ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சோகம் அங்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT