இந்தியா

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் விடுவிப்பு

DIN

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.

பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும்நிலையில், இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வெற்றிப் பேரணி குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு முறையான ஆலோசனை வழங்கத் தவறியதாக, அரசியல் செயலாளர் பொறுப்பிலிருந்து கே. கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார்.

வேலைநாள் அல்லாத ஞாயிற்றுக்கிழமையில் பாராட்டு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று கர்நாடக காவல்துறையின் அறிவுரையை மறுத்து, முறையான முன்னேற்பாடுகளின்றி நிகழ்ச்சியை நடத்தக் கூறியதுடன், முதல்வர் சித்தராமையாவுக்கு முறையான ஆலோசனை வழங்கவும் தவறியதால், அரசியல் செயலாளர் பொறுப்பில் இருந்து கே. கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார். இவர் மாநில ஒலிம்பிக் தலைவராகவும் உள்ளார்.

மேலும், அம்மாநில உளவுத்துறை ஏடிஜிபி தலைவர் ஹேமந்த் நிம்பல்கரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

மூர்த்தி நாயனார்

SCROLL FOR NEXT