பிடிபட்ட சட்டவிரோத ஆயுதங்கள்.  
இந்தியா

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

DIN

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது, ​​அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

சோதனையில், அதிகாரிகள் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களைக் கண்டுபிடித்தனர். உடனே அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கைதான நபர் ஹரியாணாவின் பிரபலமான உணவு டெலிவரி செயலியின் முகவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

முசாபர்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், சுதான்ஷு குமார் என அடையாளம் காணப்பட்ட நபர், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளை கடத்த தனது டெலிவரி முகவர் வேலையை பயன்படுத்தி வந்துள்ளார்.

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

அவருக்கு குற்றவியல் வரலாறு உள்ளது, மேலும் அவர் மீது ஐந்து குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

விசாரணையின் போது, ​​சட்டவிரோத ஆயுத கடத்ததில் மேலும் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக சுதான்ஷு தெரிவித்தார். இந்த சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் ஒரு சிறப்புப் படையை அமைத்துள்ளனர்.

இந்தக் கும்பல் பல்வேறு பகுதிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆயுதச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

நவோனியா திருட்டுக் கும்பலின் உத்தி என்ன? செல்போன் திருட்டில் கைதேர்ந்தவர்கள்!!

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT