FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அன்புமணியுடன் சந்திப்பு இல்லை: ராமதாஸ்! செய்திகள் - நேரலை!!

இன்றைய முக்கிய செய்திகள் உடனுக்குடன்.. இணைந்திருங்கள்

சிறப்புத் தொழுகை
பகிர்:
Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

நெல்லையில்

திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

பக்ரீத் பண்டிகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் இன்று காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

கோவையில் இளையராஜா

கோவையில் என் காலடி படாத இடமே இல்லை, கோவையில் வாங்கிய ஆர்மோனிய பெட்டியைத்தான் தற்பொழுதுவரை பயன்படுத்தி வருகிறேன் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..

Advertisement

Advertisement

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

லாரி பட்டறையில் தீ விபத்து

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தடுப்புப் பணிகளில் நேரடியாகக் களமிறங்கினார். மேலும் படிக்க..

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

சிவகங்கையில் சிறப்புத் தொழுகை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்பு;j தொழுகையில் ஈடுபட்டனர்.

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

நாமக்கலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாகக் கருதப்படும் பக்ரீத் பண்டிகை நாமக்கலில் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாள்

கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On : 7 ஜூன் 2025, 11:08 am IST

தங்கம் விலை குறைந்தது!!

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க..

Updated On : 7 ஜூன் 2025, 11:13 am IST

டெய்லர் முதல் யூடியூபர் வரை..

ஆபரேஷன் சிந்தூர் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டுக்குள் இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க..

Updated On : 7 ஜூன் 2025, 11:13 am IST

நாட்டில் கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 6,000 ஐ நெருங்குகிறது.

Updated On : 7 ஜூன் 2025, 1:57 pm IST

சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் படிக்க...

Updated On : 7 ஜூன் 2025, 1:57 pm IST

தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடி! ஜூன் 12-ல் திறப்பு!

தஞ்சை அருகே மானம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க...

Updated On : 7 ஜூன் 2025, 1:57 pm IST

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

Updated On : 7 ஜூன் 2025, 2:39 pm IST

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..

Updated On : 7 ஜூன் 2025, 2:41 pm IST

ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். மேலும் படிக்க..

Updated On : 7 ஜூன் 2025, 5:21 pm IST

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் பெண் உள்பட 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Updated On : 7 ஜூன் 2025, 5:47 pm IST

மதுரைக்கு அமித் ஷா வருகை: ட்ரோன்கள் பறக்க தடை!

அமித் ஷா வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

Updated On : 7 ஜூன் 2025, 6:46 pm IST

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments