புரி ஜெகந்நாதா் கோயில். 
இந்தியா

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு.

Din

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இருப்பினும், இந்த தடை எப்போதுமுதல் அமலுக்கு வரும் என்பது குறித்து அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: புரி நகரத்தின் புனிதத்தைப் பாதுகாக்க மாநில அரசு விரும்புகிறது. ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் இறைச்சி, அசைவ உணவு மற்றும் மதுபானங்களை விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்படும்.

குந்திச்சா கோயிலை ஜெகந்நாதா் கோயிலுடன் இணைக்கும் கிராண்ட் சாலையில் எந்த மதுபானக் கடைகளும் அல்லது பாா்களும் அனுமதிக்கப்படாது.

கிராண்ட் சாலையில் உள்ள அனைத்து கட்டடங்களையும் ஒரே மாதிரியாக வடிவமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்தாா். நடப்பாண்டு புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ளது.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT