சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்)
இந்தியா

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிலஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, நேற்று (ஜூன் 9) மதியம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாலை 5.50 மணியளவில் அம்மாநில காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்ற வளாகத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், 2 வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியோடு நீதிமன்றம் முழுவதும் இரவு 10 மணி வரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டதாக, அதிகாரிகள் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ஆட்சியர் அலுவகத்தில் பொருப்பட்டுள்ள ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு, மாலை 6.45 மணியளவில் வெடிக்கும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர் குழு இன்றும் நீதிமன்ற வளாகத்திலேயே முகாமிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மிரட்டல் விடுத்தவரைப் பிடிக்க காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பயங்கரவாதம் இருநாடுகளுக்கு மட்டுமான பிரச்னை அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!

டி20-யில் ஆட்ட நாயகனான டெஸ்ட்டில் ஓய்வு பெற்ற உஸ்மான் கவாஜா!

தமிழ்த் தீ பரவியதா? பராசக்தி - திரை விமர்சனம்!

தெறி ரீ-ரிலீஸ்!

ரஷிய அதிபர் புதின் கைது செய்யப்படுவாரா? டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT