முகப்பு
இந்தியா

விமான விபத்து: ஆமதாபாத் மருத்துவமனையில் குஜராத் முதல்வர் ஆய்வு!

ஆமதாபாத் மருத்துவமனைக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வருகை பற்றி...

Updated On : 12 ஜூன், 2025 at 5:10 PM
ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல். - X
பகிர்:

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 130 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்நிலையில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். காயமடைந்தவர்கள் அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.