குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ரூபானியின் வீட்டின் முன்னே அவரது உறவினர்கள் கூடியுள்ளனர்.
குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 (போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது) புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்தது உறுதியானது. பயணிகளின் பட்டியலில் 12ஆவது நபராகவும், முதல்தர வகுப்பிலும் அவரது இருக்கையும் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, விமானம் விபத்துக்குள்ளான பகுதி அருகே இருந்த மாணவர்கள் விடுதியில் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இருந்ததாகவும், அவர்கள் நிலை என்ன ஆனது என்றும் அச்சத்தில் இருப்பதாக அம்மாநில செய்தி ஊடகங்கள் கூறுகின்றனர்.
இந்த பெரும் விபத்தை சம்பவம் என்று ஏர் இந்தியா என்று கூறியதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விமானம் தீப்பற்றி எரிந்தை விபத்து என்று ஏர் இந்திய உறுதி செய்தது.
இதையும் படிக்க: குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.