ஏர் இந்தியா விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகத் தகவல்!
ஏர் இந்தியா விமான விபத்தில் 7 குழந்தைகள் பயணம்..
ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த விமானம் புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.
இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து சமீபத்திய தகவலின்படி விமானத்தில் 7 குழந்தைகள் பயணித்ததாகவும், அதில் 2 கைக்குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக விமானத்தில் பயணித்த 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அவசரமாக விரைந்துள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த விமான விபத்தையடுத்து அங்கு விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலும் ஆமதாபாத்துக்கு வந்த விமானமும் திறப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.