அகமதாபாத் விமான விபத்து பகுதியை பார்வையிட்ட மோடி  PTI
இந்தியா

பேரழிவுக் காட்சிகளால் வேதனை! மோடி

அகமதாபாத் விமான விபத்து பகுதியை பார்வையிட்ட மோடி பதிவு...

DIN

விமான விபத்து நடைபெற்ற இடத்தின் பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், ஆய்வு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி,

”அகமதாபாத்தில் விபத்து நேரிட்ட இடத்தை பார்த்தேன். பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிக்கிறது. மீட்புப் பணிகளுக்காக இரவுபகலாக பணிபுரியும் குழுவினரை சந்தித்தேன்.

இந்த நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் தொடர்ந்து உள்ளன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அகமதாபாத் விமான நிலையத்தில் உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT