துப்ரி மாட்டிறைச்சி சம்பவத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அசாமின் துப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோயிலின் மீது கடந்த 7ஆம் தேதி மர்ம நபர்கள் பசு மாட்டு தலையை வீசிச் சென்றனர். அடுத்த நாள் மீண்டும் ஒரு பசுவின் தலை கோயிலின் முன் கிடந்தது. இந்த சம்பவத்தால் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இரு சமூகத்தினரிடையே பதற்றமான சூழல் நிலவியது.
இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஜூன் 9 ஆம் தேதி நகரத்தில் தடை உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும் நிலைமை சரியானதும் மறுநாளே அவை விலக்கிக்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்ற அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நிலைமையை ஆய்வு செய்தார்.
அப்போது, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை நிகழ்த்துவோரை கண்டதும் சுட போலீஸாருக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே சனிக்கிழமை ஒரு எக்ஸ் தளப் பதிவில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, துப்ரி மாட்டிறைச்சி சம்பவத்தில் இரவு முழுவதும் 38 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.