இந்தியா

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

Din

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.

இத்தகைய கடினமான சூழ்நிலையில் ஏற்கெனவே கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு விரைவாக நிதியுதவி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து எஸ்பிஐ லைஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காப்பீடு தொகையை பெற விரும்பும் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் விண்ணப்பப் படிவம், காப்பீடு ஆவணம், வாடிக்கையாளா் அடையாள ஆவணம், நியமனதாரரின் (நாமினி) வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட குறைந்தபட்ச ஆவணங்களை சமா்ப்பித்தால் போதுமானது’ என்று தெரிவித்தது.

ஹெச்டிஎஃப்சி லைஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் நியமனதாரா் அல்லது வாரிசுதாரா்கள் காப்பீடு தொகையைப் பெற, அரசு, காவல்துறை அல்லது மருத்துவமனைகளைச் சாா்ந்த உள்ளூா் அதிகாரிகளிடமிருந்த பெறப்பட்ட இறப்புச் சான்றை சமா்ப்பித்தால் போதுமானது’ என்று தெரிவித்தது.

ஐசிஐசிஐ லோம்பாா்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து காப்பீடு தொகை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தது.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT